BREAKING NEWS:
Search

ஐக்கிய அரபு குடியரசில் 14 வயது இந்திய சிறுவன் விமானம் ஓட்டி சாதனை

துபாய்: ஐக்கிய அரபு குடியரசில் 9ம் வகுப்பு சிறுவன் ஒருவன் விமானத்தை ஓட்டி சாதனை படைத்துள்ளான். இந்தியாவை சேர்ந்த சிவில் இன்ஜினியர் அலி அஷ்கர் அனிஷ். இவரது மனைவி முனிரா. இவர்களது மகன் மன்சூர் அனிஷ்(14). ஐக்கிய அரபு குடியரசின் சார்ஜா நகரில் வசித்து வருகின்றனர். 9ம் வகுப்பு படித்து வரும் மன்சூர் அனிசுக்கு விமானியாகும் ஆசை ஏற்பட்டது. இதற்காக கனடாவில் உள்ள விமான பயிற்சி மையத்தில் பயிற்சி ெபற்றான். இதையடுத்து அவனுக்கு கனடா விமான அகாடமி, பைலட்டுக்கான சான்றிதழை வழங்கியது. இது தொடர்பாக கல்ப் செய்தி என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனி விமானத்தை ரன்வேயில் இயக்கியும், தொடர்ந்து வானத்தில் 5 நிமிடம் பறந்தும் பின்னர் லாவகமாக தரையிறக்கியும் சாதனை படைத்துள்ளான் என மன்சூரை புகழ்ந்துள்ளது. ஜெர்மனை சேர்ந்த 15 வயது சிறுவன் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 14 வயது சிறுவனின் சாதனையை மன்சூர் முறியடித்துள்ளான். மன்சூர் இதற்காக வெறும் 25 மணி நேரமே பயிற்சி பெற்று பைலட் சான்றிதழை பெற்றுள்ளான்.
Please follow and like us:
0



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)