BREAKING NEWS:
Search

கார்பைட் கல்லில் பழுக்க வைத்த 4 டன் மாம்பழங்கள் அழிப்பு

கமுதி: கார்பைட் கல்லில் பழுக்க வைத்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 4 டன் மாம்பழங்களை, கமுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு, கமுதியில் மாம்பழங்கள் கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சந்திரபோஸ், உணவு பாதுகாப்பு தனி அ லுவலர்கள் நாகலிங்கம், கிருஷ்ணக்குமார், வீரமுத்து ஆகியோர் கமுதியில் மாம்பழ கடைகள் மற்றும் குடோன்களை சோதனையிட்டனர். அப்போது கமுதி சந்தை பேட்டை அருகே, சின்ன உடப்பங்குளத்தை சேர்ந்த வியாபாரி வலம்புரியின் குடோனில் கார்பைட் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்கள் இருந்தது தெரிய வந்தது. போலீசார் உதவியுடன் ரூ.2 லட்சம் மதிப்பிலான அந்த மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சந்திரபோஸ் கூறுகையில், ‘கார்பைட் கல்லில் பழுக்க வைத்த மாம்பழங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும். இதனை வியாபாரிகள் விற்பனை செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுத்து, கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்’ என்றார்.
Please follow and like us:
0



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)