BREAKING NEWS:
Search

கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சங்கரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் சங்கம்

விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற வறட்சி நிவாரணம் மற்றும் மானியத் தொகையில் மிகப் பெரிய அளவில் ஊழல் செய்து வரும் கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சங்கரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கம் வழி்யுறுத்தல்.
…………………………………. …………
கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உழவர் தின விழா கொண்டாடுவது குறித்த அவசரக் கூட்டம் மாவட்ட ஆலோசகர் நசிர்அகமது தலைமையில் நடைபெற்ற இந்தத் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜா மாநில மகளிர் அணித்தலைவர் திருமதி ,பெருமா, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர்
இராம கவுண்டர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு நிறைவேற்ப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து விளக்க உரையாற்றனர்கள்.மேலும்
இந்தக் கூட்டத்தின் போது
| ,ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதற் வருவாய் துறையினர் விவசாயிகளுக்கு தடை விதிக்கக் கூடாது.
2 , விளை நிலங்களை நாசம் செய்யும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த முழுமையாைக நடவடிக்கை எடுக்க வேண்டும்
3. இந்த ஆண்டு உழவர் தின பேரணி மற்றும் உழவர் தின விழா மிகப் பெரிய அளவில் கிருஷ்ணகிரியல் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைப்பட்டது.”
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர்
இராம கவுண்டர் கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனராக உள்ள சங்கரன்  வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கிய நிவாரண தொகை விவசாயிகளுக்கு வழங்காமல் மிகப் பெரிய அளவில் ஊழல் செய்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளார்.
இது மட்டுமின்றி, ஆத்மா திட்டம், திட்டத்தில் முறைகேடு, விவசாயிகளுக்கு ஆடு, மாடுகள் வாங்கி கொடுத்ததில் முறைகேடு,ராகி, உழுத்து, துவரை, நிலக்கடலை, உற்பத்தி மானியம் மற்றும்
உழுத்து, துவரை, நிலக்கடலை, உற்பத்தி மானியம் மற்றும் விவசாயிககளுக்கு வழங்கப்படும் உற்பத்தி மானியம் என எந்த மானியமும் விவசாயிகளுக்கு முழுமையாக வழங்காமல் லட்சகணக்கில் பணம் ஊழல் செய்து விவசாயிகளை
ஏமாற்றியுள்ளார் இவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வழியுறுத்தி வருகின்ற
20-ம் மிகப் பெரிய அளவில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
பேட்டி. இராம கவுண்டர்
மாநில தலைவர்
Please follow and like us:
0



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)