BREAKING NEWS:
Search

கேரளாவில் தொடர்ந்து மாட்டிறைச்சி சாப்பிடப்படும் பா.ஜனதாவின் புதிய மந்திரி

கேரளாவில் தொடர்ந்து மாட்டிறைச்சி சாப்பிடப்படும் என மத்திய சுற்றுலாத் துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் கூறிஉள்ளார்
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த மூன்றாம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கன்னன்தானம் மத்திய மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். நரேந்திர மோடி அரசில் கேரளாவில் இருந்து இடம்பெற்றுள்ள முதல் மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம். மத்திய சுற்றுலாத் துறை மந்திரியாக அல்போன்ஸ் கன்னன்தானம் பொறுப்பு வகிக்கிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிஉள்ள அவர் முதல் நாளிலே சர்ச்சைக்குரிய மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக பேசினார்.
கேரளாவில் தொடர்ந்து மாட்டிறைச்சி சாப்பிடப்படும் என அல்போன்ஸ் கன்னன்தானம் கூறிஉள்ளார்.
“கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் தங்களுடைய மாநிலத்தில் மாட்டிறைச்சி சாப்பிடப்படும் என கூறிவிட்டார், அதுபோன்று கேரளாவிலும் தொடரும்,” மாட்டிறைச்சியை சாப்பிடக்கூடாது என பாரதீய ஜனதா கட்டாயப்படுத்தவில்லை. எந்தஒரு இடத்திலும் நாங்கள் உணவை தீர்மானிக்க முடியாது. இது மக்கள் தேர்வு செய்யக்கூடியது என்றார் அல்போன்ஸ் கன்னன்தானம். பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் கோவா போன்ற மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிடப்படும் போது, கேரளாவில் எந்தஒரு பிரச்சனையும் இருக்காது என்றார்.
செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து பேசுகையில், என்னால் கிறிஸ்தவ சமூதாயம் மற்றும் பாரதீய ஜனதா இடையே ஒரு பாலமாக செயல்பட முடியும். பாரதீய ஜனதா குறித்து கிறிஸ்தவர்கள் கடந்த காலங்களில் எழுப்பிய கவலைகள் குறித்துக் கேட்கிறீர்கள். மோடி ஆட்சிக்கு வந்தால் கிறிஸ்தவர்கள் எரித்துக் கொல்லப்படுவதோடு கிறிஸ்தவ தேவாலயங்களும் இடிக்கப்படும் என்று கடந்த 2014-ல் பிரசாரம்  செய்யப்பட்டது. நீங்கள் எந்த மத நம்பிக்கை வேண்டுமானாலும் கொண்டிருங்கள். நான் உங்களைப் பாதுகாப்பேன் என்று மோடி தெளிவுபடுத்தி விட்டார். அனைவரையும் அரவணைத்து செல்வதில் அவர் சிறப்பாக செயல்படுகிறார் என்றார்.
Please follow and like us:
0



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)