BREAKING NEWS:
Search

சாம்பியன்ஸ் பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ளுமா இந்தியா?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில் ‘க்ரூப் பி’ யில் நேற்று நடந்த போட்டியில் இந்தியாவை இலங்கை அணி எளிதில் வென்று தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகளை கொண்ட க்ரூப் பியில் நடந்த அனைத்து போட்டிகளும் மழையின் குறுக்கீடின்றி நடந்ததால் அனைத்து போட்டிகளுக்கும் வெற்றி/தோல்வி தீர்வு கிடைத்தது.  இந்தியா: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினால் அரை இறுதி வாய்ப்பு. மற்ற அணிகளுக்கு அரை இறுதி செல்ல என்ன தேவையோ அதேதான் இந்தியாவிற்கும். ஒரு வேளை அந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டாலும் இந்தியாவின் ரன் ரேட் கருதி அரை இறுதிக்கு முன்னேறும்.
தென் ஆப்பிரிக்கா: இந்தியாவை வென்றால் மட்டுமே தென் ஆப்பிரிக்காவுக்கு உள்ளே நுழையம் வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை இந்தியா-தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான்- இலங்கை என இரண்டு போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டால், ரன் ரேட் அடிப்படையில் இந்தியாவுடன் தென் ஆப்பிரிக்கா அரை இறுதி செல்லும். இல்லையேல், இந்தியா-தென் ஆப்பிரிக்கப் போட்டி ரத்தாகி பாகிஸ்தான்-இலங்கை போட்டிக்கு முடிவு கிடைத்தால் தென் ஆப்பிரிக்கா வெளியேற்றப்படும். இலங்கை: இலங்கை, பாகிஸ்தானை வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் இருந்தாலும் மற்றொரு வழியிலும் இலங்கை அரை இறுதி வர வாய்ப்பு உள்ளது. தங்களது போட்டி ரத்தாகி இந்தியாவோ அல்லது தென் ஆப்பிரிக்காவோ வென்றால், வெற்றி பெறும் அணியுடன் இலங்கை அரை இறுதி செல்லும். இரண்டு போட்டிகளுமே ரத்தானால் இலங்கை வெளியேறும். பாகிஸ்தான்: அனைத்து அணிகளுமே வெற்றி பெறும் முனைப்பில் இருந்தாலும், முதல் போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான், ரன் ரேட்டில் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு வெற்றி பெறுவதைத் தவிர வேறு வழி இல்லை. மற்ற அணிகளுக்கு அரை இறுதி செல்ல சில வாய்ப்புகள் இருந்தாலும், பாகிஸ்தான் இலங்கையுடனான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும்.
Please follow and like us:
0



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)