BREAKING NEWS:
Search

சில்க் ஸ்மிதாவை தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்த வினுசக்கரவர்த்தி காலமானார்..ஆழ்ந்த_இரங்கல்கள்.

நடிகர் வினு சக்கரவர்த்தி உடல் நலக் குறைவால் சென்னையில் நேற்று மாலை (வியாழக்கிழமை) காலமானார். வினு சக்கரவர்த்தியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1002 படங்களில் நடித்தவர் வினு சக்கரவர்த்தி. இவர் நடிப்பில் வெளியான ‘குருசிஷ்யன்’, ‘அண்ணாமலை’, ‘அருணாசலம்’, ‘நாட்டாமை’, ‘மாப்பிள்ளை கவுண்டர்’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘ஜெமினி’, ‘முனி’, ‘தேசிங்கு ராஜா’, ‘வாயை மூடி பேசவும்’ போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. வினு சக்கரவர்த்தி நடித்த முதல் படம் ‘கரும்பு வில்’, 500வது படம் ‘சின்னத்தாயி’. ராகவா லாரன்ஸ் இயக்கிய ‘முனி’ ஆயிரமாவது படம். வினு சக்ரவத்தி, திரைப்படத் துறைக்கு வந்த ஆரம்ப காலத்தில் கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் கதாசிரியாராக பணிபுரிந்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய ‘பரசக்கே கண்ட தின்மா’ என்ற படம் வெற்றிபெற்றது. அதுதான் பின்பு ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ என்ற தலைப்பில் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் சிலுக்கு என்ற கதாபாத்திரத்தில் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தியவர் வினு சக்ரவர்த்திதான். தற்போது 74 வயதாகும் வினு சக்ரவர்த்தி, கடந்த 3 ஆண்டுகளாக உடல் நலமின்றி இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) திடீரென உடல்நிலை மிக மோசமான நிலையில் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று (வியாழக்கிழமை) மாலை 7 மணியளவில் காலமானார். வினு சக்கர வர்த்தியின் மனைவி பெயர் கர்ணப்பூ. இவர்களுக்கு சரவணன் என்கிற மகனும், சண்முகப்பிரியா என்கிற மகளும் உள்ளனர். வினு சக்கரவர்த்தியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
Please follow and like us:
0



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)