BREAKING NEWS:
Search

டெல்லி அணியிலிருந்து டுமினி திடீர் விலகல் – ஐ.பி.எல்

ஐ.பி.எல். ரி-ருவென்ரி தொடருக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலிருந்து, தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரரான ஜே.பி. டுமினி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.

தனது தனிப்பட்ட காரணங்களினாலேயே இந்த தொடரிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். டுமினியின் இழப்பு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு பாரிய பின்னடைவாக கருதப்படுகின்றது.

நடப்பு 10வது ஐ.பி.எல். தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கடந்த ஆண்டு டெல்லி அணியின் தலைவராக செயல்பட்ட டுமினி, கடந்த தொடரில் 10 போட்டிகளில விளையாடி 191 ஓட்டங்களைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:
0



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)