BREAKING NEWS:
Search

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ; நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக, இன்று ஆளுநரை சந்திக்க திமுக முடிவு…

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர்ராவ் சென்னை வந்துள்ளார். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரி ஆளுநரிடம் நேரில் வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்ய அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் பரிந்துரை செய்தார். ஆனால் தங்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது எனவும், கொறடா உத்தரவை தாங்கள் மீறவில்லை எனவும் தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் கூறினர். மேலும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிருப்தி எம்ல்ஏக்கள் எடப்பாடி அரசுக்கு எதிரான நிலை எடுத்த போது அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர். எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர்ராவ் மும்பையில் இருந்து சென்னை வந்துள்ளார். இந்நிலையில், திமுக எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் ஆளுநரை சந்திக்க உள்ளனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருப்பதால் ஆளுநருடனான சந்திப்பில் பங்கேற்க மாட்டார் எனத் தெரியவந்துள்ளது. இந்த சந்திப்பின்போது தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டச்சொல்லி திமுகவினர் வலியுறுத்துவார்கள் என தெரிகிறது.
Please follow and like us:
0



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)