BREAKING NEWS:
Search

பணிக்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு உறுதி…

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தம் ; பணிக்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு உறுதி… தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும் முன் 20 சதவிகித இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். ஏற்கனவே கடந்த 18 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர் என்று ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர் கணேசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பணிக்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
Please follow and like us:
0



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)