BREAKING NEWS:
Search

மாட்டுத்தலைகளுடன் கோவையில் போராட்டம்! 20 பேர் கைது!

மாடுகளை இறைச்சிக்காக விற்கத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பாக மாட்டுத் தலைகளுடன் போரட்டம்  நடத்திய, ஆதி தமிழர் பேரவை அமைப்பினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர். மாடுகளை இறைச்சிக்காக விற்க மத்திய அரசு  தடை விதித்துள்ளதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.இந்நிலையில், கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பாக மாட்டிறைச்சிப் படையல் வைத்துப் போராட்டம் நடத்தப் போவதாக ஆதி தமிழர் பேரவை அமைப்பினர் அறிவித்து இருந்தனர். காவல் துறையினர் போராட்டத்துக்கு அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி ஆதி தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் முருகன் உள்ளிட்ட 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில், அந்த அமைப்பினைச் சேர்ந்த இருவர் மாட்டுத் தலைகளுடன் சாலையின் நடுவே ஓடிவந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் இரண்டு மாட்டுத் தலைகளை கைப்பற்றியதுடன் அந்த இருவரையும் கைது செய்து வாகனத்தி்ல் ஏற்றிச்சென்றனர்.
Please follow and like us:
0



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)