BREAKING NEWS:
Search

மீண்டும் ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டதில் 100 பயணிகள் காயம்

லக்னோ, உத்தரபிரதேசத்தின் அசம்காரில் இருந்து டெல்லி செல்லும் கைபியாத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலையில் அவுரையா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள பட்டா, அச்சல்டா ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்ற போது, ரெயில்வே பணிகளுக்கான பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனம் (டம்பர்) ஒன்றில் மோதி தடம்புரண்டது. இதில் 10 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம்புரண்டு, ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி சுமார் 100 பயணிகள் காயமடைந்தனர். இதில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பல ரெயில்கள் ரத்து விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். ரெயிலில் இருந்த பிற பயணிகள் அனைவரும் மாற்று ரெயில் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட்டனர். இந்த விபத்தை தொடர்ந்து அந்த பாதையில் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன், சில ரெயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்பட்டன. ‘டம்பர்’ ஒன்று, என்ஜினில் மோதியதால் கைபியாத் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாகவும், இதில் சில பயணிகள் காயமடைந்தனர் எனவும் மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அங்குள்ள நிலைமையை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று கடந்த 19–ந்தேதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 22 பேர் உயிரிழந்தனர். 150–க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று மீண்டும் ஒரு ரெயில் தடம்புரண்டு இருப்பது மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Please follow and like us:
0



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)